மணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

154

அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் இருவர் பொகவந்தலாவை தேரேசியா தோட்டத்தில் வைத்து பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிலாணி தோட்டம் மற்றும் தேரேசியா தோட்டத்தைச் சேர்ந்த 33 மற்றும் 32 வயதுடைய இரண்டு ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் இருவரும் மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்திய பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரையும் இன்றைய தினம் ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதோடு,மேலதிக விசாரணைகளையும் பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE