ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

154

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி விரிவான கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது.

இதன்படி, வைரம் என்ற சின்னத்துடன் ஐக்கிய தேசிய முன்னணி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்துக்காக வைரம் என்ற சின்னத்தை ஏற்றுக்கொள்வதில் பங்காளி கட்சிகளின் மத்தியில் இருந்து முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகின.

எனினும் இறுதியில் வைரம் என்ற சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE