திருகோணமலையில் நீரிழிவு தொடர்பான செயற்திட்டங்கள்

154

திருகோணமலை பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சித்த மருத்துவ பிரிவின் ஏற்பாட்டில் நீரிழிவு நோய் தொடர்பான கண்காட்சி, விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் நீரிழிவு தொடர்பிலான பரிசோதனைகள் என்பன நடைபெற்றுள்ளன.

இந்த செயற்திட்டங்கள் இன்று கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில், கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் வீ.கனகசிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளன.

இதில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் அருட்தந்தை ஜீ.எப்.ராஜேந்திரம் கலந்து கொண்டிருந்ததுடன் சித்த மருத்துவ பீடத்தின் பகுதித் தலைவர் பகிரதன் விஜிதா நீரிழிவு தொடர்பிலான விளக்கவுரைகளை வழங்கி வைத்துள்ளார்.

இதன்போது, யோகாசன பயிற்சிகள், நீரிழிவு கட்டுப்பாடு தொடர்பிலான உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்பான விளக்கவுரை ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்பூட்டப்பட்டுள்ளது.

இதில் பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் மற்றும் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், இலவச நீரிழிவு பரிசோதனைகளை பலர் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

SHARE