விஜய் தமிழ் சினிமாவில் என்றுமே தவிர்க்க முடியாத ஒரு பெயர். எப்போதும் இவரை பற்றி பரபரப்பான செய்திகள் வந்துக்கொண்டே தான் இருக்கும்.
ஆனால், இந்த செய்திகள் கிசுகிசு என்றில்லாமல், அவர் படங்களை பற்றிய அப்டேட் மற்றும் அரசியல் களம் பற்றியதாக தான் இருக்கும்.
இந்நிலையில் விஜய் சர்கார் படத்தில் சிகரெட் பிடிப்பது போல் காட்சிகள் இருக்க, இதற்கு கேரளா அரசு விஜய் மற்றும் படக்குழு மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுக்குறித்து சீமானிடம் கேட்டபோது ‘இது நல்லது தானே, அதை நான் வரவேற்கிறேன், தம்பி விஜய் இனி கவனமாக இந்த மாதிரி காட்சிகளை தவிர்த்து நடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.