Tumblr நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

235

>பிரபல்யமான சமூகவலைத்தளங்கள் வரிசையில் Tumblr உம் காணப்படுகின்றது.

இச் சேவைக்கான அன்ரோயிட் மற்றும் iOS அப்பிளிக்கேஷன்களும் வெளியிடப்பட்ள்ளன.

எனினும் தற்போது iOS சாதனங்களுக்காக ஆப்ஸ் டோரில் தரப்பட்டுள்ள அப்பிளிக்கேஷன் தற்காலிகமாக நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அப்பிளிக்கேஷனில் காணப்படும் குறைபாடு ஒன்றினை நிவர்த்தி செய்யும் முகமாகவே இவ்வாறு நீக்கப்படுவதாக Tumblr நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வார ஆரம்பத்தில் பயனர்கள் குறித்த செயலியில் குறைபாடு இருப்பதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் Tumblr நிறுவனம் குறித்த அப்பிளிக்கேஷனை நீக்கியதா அல்லது ஆப்பிள் நிறுவனம் நீக்கியதா என்ற குழப்பம் நீடித்துவருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

SHARE