மகிந்த தரப்பிற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் ஒப்படைப்பட்டுள்ளது

123

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறுப்பினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் கடந்த சில வாரங்களாக பசில் ராஜபக்ச ஈடுபட்டுவந்த நிலையில் தற்போது அந்த பொறுப்பினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் திலங்கா சுமதிபால எஸ்பி திசநாயக்க லக்ஸ்மன் வசந்த பெரேரா ஆகியோரிடம் சிறிசேன வழங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியின் உத்தரவை தொடர்ந்து திலங்க சுமதிபால ஐக்கியதேசிய கட்சியின் பல உறுப்பினர்களையும் சிறுபான்மை கட்சிகளின் உறுப்பினர்களையும் தொடர்புகொண்டுள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE