தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த இன்னொரு ஹீரோ சர்வானந்த். தெலுங்கு சினிமாவில் பிரபலமான இவர் நடிகர் ராம்சரணின் நெருங்கிய உறவினர்.
தற்போது சபரிமலை சீசன் தொடங்கி விட்டதால் அவரும் அவரது நெருங்கிய வட்டாரங்களும் மாலை அணிந்து விரதம் இருக்கின்றனராம். ஒவ்வொரு வருடமும் சபரிமலை யாத்திரை செல்வார்களாம்.
இதற்காக பிரபலம் என நினைத்துக்கொள்ளாமல் அவர் சாதாரண பக்தனை போல படி பூஜைகள் செய்து வந்தவர்களுக்கு அன்னதானம் செய்து முறைப்படி விரதம் இருந்துள்ளாராம்.