அரசு உதவித்தொகை கிடைக்காத காரணத்தால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பிரித்தானிய பெண்

145

பிரித்தானியாவில் அரசு உதவித்தொகைக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த பிரித்தானிய தாயார் ஒருவர் தமது பிள்ளைகளின் பசியை போக்க பாலியல் தொழிலில் ஈடுபட நிர்பந்தித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வட மேற்கு இங்கிலாந்தில் உள்ள மெர்ஸெசைட் கவுண்டியை சேர்ந்தவர் ஜூலி, இவரே Universal Credit எனப்படும் அரசு உதவித்தொகைக்காக 8 வாரங்கள் காத்திருந்து கடைசியில் ஏமாற்றமடைந்துள்ளார்.

இதனையடுத்து தமது ஒரே ஒரு பிள்ளைக்காக அவர் பாலியல் தொழிலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இச்செயல் தமக்கு கடும் ஏமாற்றத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியது என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஒரு சூழலில் நான் தள்ளப்படுவேன் என வாழ்க்கையின் ஒருகட்டத்திலும் நினைத்துப்பார்த்ததில்லை எனவும் ஜூலி குறிப்பிட்டுள்ளார்.

Universal Credit திட்டத்தால் சில பெண்கள் சிவப்பு விளக்கு பகுதிக்கு முதன் முறையாக செல்கின்றனர் என கடந்த மாதம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மட்டுமின்றி, தமது தொகுதியில் வறுமையில் தத்தளிக்கும் பல பெண்கள் தற்போதைய பொதுநல சீர்திருத்தங்களால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் தொழிற்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE