தேசிய மீனவர் தினமான இன்று வடகிழக்கு மற்றும் இலங்கை முழுவதும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்ட பேரணி தற்போது பொலன்னறுவை றொயல் ஆரம்ப பாடசாலை அருகாமையிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த போராட்டத்தில் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இது தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் கேமன் குமார தலைமையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.