டெங்கு காய்ச்சலுக்குள்ளாகி மீண்டுவந்த நடிகை ஸ்ரத்தா கபூர்

109

நடிகை ஸ்ரத்தா கபூர் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தி, தெலுங்கு என அடுத்தடுத்து படங்களில் இவர் கமிட்டாகி வருகிறார்.

அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டெங்கு காய்ச்சல் வந்தது. இதனால் கடும் அவதிக்குள்ளானவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தீவிர சிகிச்சைக்கு பின் அவர் வீட்டில் இரண்டு வாரங்கள் கட்டாய ஓய்வில் இருந்தார். தற்போது பூரணமாக குணமடைந்து படப்பிடிப்பிற்கு மீண்டும் திரும்பியுள்ளாராம்.

SHARE