மகளை எளிமையாக வளர்க்கிறேன் – அஜித்

166

விஸ்வாசம் படப்பிடிப்புகள் முடிவடைந்தது அஜித், மனைவி ஷாலினி, மகன், மகள் என தன் குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார். அண்மையில் விமான நிலையத்தில் அவரை கண்டவர்கள் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அங்கு அவர் தன் மகள் அனோஷ்காவுடன் தினமும் காலையில் கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி செய்து வந்தாராம். அண்மையில் ஒரு ரசிகர் அவரை பின்னால் விரட்டி சென்று தல தல என கூப்பிட்டாராம்.

உடனே சைக்கிளை நிறுத்திய அஜித் அந்த ரசிகரிடம் நான் என குடும்பத்துடன் பிரைவசிக்காக வந்துள்ளேன். தொந்தரவு செய்யாதீர்கள் என கூறியுள்ளார்.

அந்த ரசிகர் புகைப்படம் எடுக்க வேண்டும் என தன் ஆசையை சொல்ல அவர் இந்த மாதிரியான விஷயங்கள் என் மகளுக்கு தெரியக்கூடாது என அவளை எளிமையாக வளர்க்கிறேன். உங்கள் போன் நம்பர் கொடுங்கள். நானே போன் செய்கிறேன் என நம்பரை வாங்கிவிட்டு மகளுடன் சென்றுவிட்டாராம்.

பின் ஒரு மணிநேரம் கழித்து அவருக்கு போன் செய்து குறிப்பிட்ட இடத்திற்கு வரசொல்லி போட்டோவுக்கு போஸ் கொடுத்து அந்த ரசிகரை வாழ்த்தி அனுப்பினாராம்.

SHARE