களத்தில் இறங்கிவிட்டால் தடுத்து நிறுத்த முடியாத ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் ரி 20 போட்டியில் மிகச்சிறந்த ஸ்டார் என்று மேக்ஸ்வெல் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒருநாள் போட்டியில் அதிக இரட்டைச் சதங்களும், ரி 20 போட்டியில் அதிக சதமும் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியா — இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி 20 தொடர் இன்று பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தடுத்து நிறுத்த முடியாத ரோஹித் சர்மா வெள்ளை பந்து போட்டியில் மிகப்பெரிய ஸ்டார் என்று அவுஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வரும்போது ஒரு நாள் கிரிக்கெட் ஈசியானது போன்று எண்ணத் தோன்றும். அவரது ஆட்டத்தை பார்க்க நான் விரும்புவேன். அவர் பந்தை எங்க அடிக்க விரும்புகிறாரோ? அங்கே பந்தை அடிக்கும் திறமை பெற்றவர். அது வேகப்பந்தாக இருந்தாலும் சரி, சுழற்பந்து வீச்சாக இருந்தாலும் சரி. அவர் விரும்பும்போது பந்தை வெகு தூரத்திற்கு விரட்டுவார்’’ என்றார்.