அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்களுடன் சூடு நடத்திய நபர் மற்றும் பொலிஸ் அதிகாரி என நால்வர் உயிரிழந்துள்ளனர்.
பலியான இரண்டு பெண்களில் ஒருவர் மருத்துவர் மற்றொருவர் உதவி மருந்தாளராவார்.
பொலிஸாருக்கும் அந்த துப்பாக்கிதாரிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியாகி உள்ளார். துப்பாக்கிதாரி தம்மைதாமே மாய்த்து கொண்டாரா என தெரியவில்லை.
இந்த தாக்குதல் பெண்ணை குறி வைத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிக்காகோ நகரின் செளத்சைட் மெர்சி மருத்துவமனையில் கடந்த திங்கள் இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகள், அந்த மருத்துவமனையைச் சோதனையிட்டனர்.
தாக்குதல் சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் மருத்துவமனை ட்விட்டரில் தெரிவித்தது.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இவ்வாண்டு கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக ‘கன் வயலன்ஸ் ஆர்கிவ்’ இணையதளம் கூறுகிறது.