உடலில் கொழுப்புக்களை கரைக்கச் செய்கின்றது.

158

பெரும்பாலும் நிறைய பேருக்கு உடலில் இருக்கும் கொழுப்புகள் குறைந்தாலும் கைகளில் தொங்கும் சதைகள் மட்டும் குறையாமல் அப்படியே இருக்கும்.

நாம் தினமும் கைகளுக்கான சில உடற்பயிற்சி முறைகளை தொடர்ந்து செய்து வந்தால், கைகளில் ஓடும் ரத்தத்தின் வேகம் அதிகரித்து, கைகளில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கச் செய்கின்றது.

கை சுற்றும் உடற்பயிற்சி

நமது கால்களுக்கு போதிய இடைவெளி விட்டு நேராக நின்றுக் கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டிக் கொள்ள வேண்டும். பின் நமது கைகளை மட்டும் கடிகாரம் சுற்றுவது போல 20 நிமிடம் சுற்றி, பின் கைகளை தளர்வாக சாதாரண நிலைக்கு கொண்டு வர வேண்டும். இதே போல ஒரு நாளைக்கு 15 முறைகள் செய்து வர வேண்டும்.

கத்தரிக்கோல் உடற்பயிற்சி

கத்திரிக்கோல் உடற்பயிற்சி என்பது கால்களுக்கு போதிய இடைவெளி விட்டு நின்று, நமது கைகளை V ஷேப்பில் வைக்க வேண்டும். பின் இரு கைகளையும் குறுக்கே X ஷேப்பில் கொண்டு வந்து, மீண்டும் V ஷேப்பில் கொண்டு வர வேண்டும்.

இதே போல V மற்றும் X ஷேப்பில் மாறி மாறி 20 முறைகள் செய்து வர வேண்டும். பின் நமது கைகளை தளர்த்தி 10 நொடிகள் சாதாரணமாக விட்டு, மீண்டும் இதே போல செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முழங்கை உடற்பயிற்சி

நாம் முழங்கை உடற்பயிற்சியை செய்யும் போது மட்டும் கொஞ்சம் வேகமாக செய்ய வேண்டும். கால்களுக்கு போதிய இடைவெளி விட்டு, கைகளை பக்கவாட்டில் நீட்டி, பின் கைகளை மடக்கி, முழங்கைகளை பின்னோக்கி தள்ள வேண்டும்.

கை அலை உடற்பயிற்சி

கால்களுக்கு போதிய இடைவெளி விட்டு நின்று கொண்டு கைகளை பக்கவாட்டில் நீட்டிக் கொள்ள வேண்டும். பின் அலை அடிப்பது போல கைகளை மேலிருந்து கீழாக 20 முறைகள் அசைக்க வேண்டும்.

SHARE