தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் பிரசன்னா. இவரின் திருட்டுப்பயலே-2 கூட இவருக்கு விருதுகளை எல்லாம் வாங்கிக்கொடுத்தது.
இந்நிலையில் சமீபத்தில் இவரையும், சிவகார்த்திகேயனையும் ஒப்பிட்டு ஒரு ரசிகர் மோசமான கருத்து கூற, அதற்கு மிகவும் பக்குவமாக பிரசன்னா பதில் அளித்திருந்தார்.
இந்த கருத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது, இதை தொடர்ந்து பிரசன்னாவிற்கு வாழ்த்து மழை தான்.
அதிலும் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் அனைவருமே பிரசன்னாவிற்கு பாராட்டு தெரிவிக்க, பிரசன்னா உண்மையாகவே செம்ம சந்தோஷம் ஆகிவிட்டார்.
எத்தனை பேர் கமெண்ட் செய்தாலும் அதற்கு நிதானமாக பதில் அளித்து வருகிறார்.