பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தன்னுடைய குழந்தையை கையில் அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தினரி இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பல்வேறு தடைகளை தாண்டி கடந்த 2010ம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு பாகிஸ்தானிற்காக விளையாட வேண்டும் என பலரும் சர்ச்சையை கிளப்பி வந்த நிலையில், இந்தியாவிற்காக தொடர்ந்து விளையாடுவேன் என உறுதியளித்தார்.
https://twitter.com/MirzaSania/status/1065289230841073664
அதன்படி தொடர்ந்து விளையாடி வந்த சானியாவிற்கு கடந்த 30-ம் தேதியன்று ஹைதராபாத் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு `இஸான்’ எனப் பெயரிட்டனர். இதற்கு அரபு மொழியில் கடவுளின் பரிசு என அர்த்தமாம்.
இந்த நிலையில் தன்னுடைய குழந்தையை கையில் அணைத்தபடி, ‘தருணங்கள்’ மற்றும் ‘அல்லமதுல்லா’ என குறிப்பிட்ட புகைப்படத்தினை சானியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.