உடலில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு மரபுப் புள்ளிகள் உண்டு. அவற்றை கண்டுபிடித்து அழுத்தம் தருவதால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.
அந்த வகையில் இரு புருவங்களுக்கு இடையே அழுத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
செய்யும் முறை
- இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் இடத்தை மூன்றாவது கண் என்று சொல்வார்கள். அந்த இடத்தில் இருக்கும் புள்ளியை கண், மூக்கு, புருவம் போன்றவற்றிற்காக மையப் புள்ளியாக விளங்குகிறது.
- முதல் முறையில் ஆள்காட்டி விரலால் மூன்றாவது கண் இடத்தை 60 நொடிகளுக்கு அழுத்த வேண்டும்.
- இரண்டாவது முறையில் ஆள்காட்டி விரலால் இரு புருவங்களுக்கு மத்தியில்அழுத்தி வட்ட வடிவில் விரலை எடுக்காமல் அழுத்தம் கொடுங்கள்.
இரு புருவங்களுக்கு இடையே அழுத்தினால் கிடைக்கும் நன்மைகள்
- அக்குபிரஷர் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. வலிகள் குறைகின்றது. மன அழுத்தம் மற்றும் உடல் வலிகளிலிருந்து நிவாரணம் தருகிறது.
- உங்களுக்கு மைக்ரைன் இருந்தால் குணமாகும். தினமும் செய்யும்போது நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இது ரத்த நாளங்களை தூண்டுகிறது. சரும நோய்களுக்கு நல்ல பலனைத் தருகிறது
- அக்குபிரஷரினால் எல்லா வியாதியை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் அதன் தீவிரத்தை குறைக்கும்போது நோய்கள் விரைவில் குணமாகும்.
- மேலும் தலையின் பின்பகுதியில் அழுத்தினால் தீராத தலைவலி குணமாகும். தலையில் நீர் கோர்த்திருந்தால் அதற்கு- தலை சுற்றல், கழுத்தில் விறைப்புத் தன்மை, கழுத்து வலி போன்றவை குணமாகும்.