போட்டிகளில் ஓர் ஆண்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் எனும் விராட் கோஹ்லியின் சாதனையை, நேற்றைய போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ஷிகர் தவான் முறியடித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக 42 பந்துகளில் 76 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம், ஓர் ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற கோஹ்லியின் சாதனையை தவாண் முறியடித்துள்ளார்.
தற்போது ஷிகர் தவான் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 648 ஓட்டங்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் வீரர் பஹர் ஜமான் (576 ஓட்டங்கள்), இந்திய வீரர் ரோஹித் ஷர்மா (567 ஓட்டங்கள்), பாபர் ஆசம் (563 ஓட்டங்கள்) ஆகியோர் உள்ளனர்