சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் வந்தா ராஜாவா தான் வருவேன். சுந்தர்.சி இயக்கி வருகின்ற இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்களுடன் மோத இருக்கும் இப்படத்தின் டீசரின் ப்ரோமோ நேற்றிரவு வெளியாகி பயங்கர டிரெண்டாகி யுடியுபிலும் டிரெண்டிங்கில் 3வது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் சிம்பு இன்று ஒரு வீடியோவில், எனக்கா ரெட் கார்டு…. எடுத்து பாரு என் ரெக்கார்டு… என பாடி வெளியிட்டுள்ளார். அநேகமாக இது இப்படத்தின் ஒபனிங் சாங்கின் இரு வரிகளாக தான் இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.