தமிழகத்தில் எப்படி பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை விஜய் வைத்திருப்பது போல் தெலுங்கில் பவன் கல்யாண். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் என்பது வேற லெவல் தான்.
இந்நிலையில் இவர் சென்னையில் தன் கட்சி குறித்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார், அது முடிந்து சில யு-டியுப் சேனலுக்கு பேட்டியளித்தார்.
அப்போது சர்கார் பிரச்சனை குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு அவர் ‘சினிமா என்பது எளிதில் எல்லோரும் தாக்கக்கூடிய மீடியம்.
ஒரு தியேட்டரில் கல் எறிந்தால் கூட அது ஒரு நியூஸ் தான், அப்படியிருக்கையில் இதுப்போன்ற பிரச்சனைகள் சினிமாவிற்கு தொடர்ந்து நடந்துக்கொண்டே தான் இருக்கும்.
என் படத்திற்கு கூட நடந்துள்ளது, வேறு வழியில்லை, படத்தின் நடிகர், இயக்குனர் தான் தைரியமாக அதை எதிர்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.