தொப்பை வர அன்றாடம் நாம் சாப்பிடும் உணவு முறைகள் ஒரு காரணமாக இருந்தாலும் வேலை செய்யாமல் ஒரே இடத்தில் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.
மேலும் இயற்கையான முறையில் தொப்பையை குறைக்க உதவும் அற்புதமான வழியைப் பற்றி பார்க்கலாம்.
தேவையானவை
- அரைத்த 1 இஞ்சி வேர்
- 1 கிரீன் தேநீர் பை
- 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்
- 1 கப் தண்ணீர்
தயாரிப்பது எப்படி
- ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். 3 நிமிடங்கள் அரைத்த இஞ்சி வேர் சேர்த்து கொதிக்க விடவும். பின் கொதிக்க வைத்த நீரை வடி கட்டவும். பச்சை தேயிலை பையை 1 நிமிடம் வடி கட்டிய நீரில் இட்டு வைக்கவும்.
- தேயிலை பையை பிழிந்து, ஆமணக்கு எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கி பருகவும். தினமும் இந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம் தொப்பை மற்றும் கொழுப்பை குறைத்து ஆரோக்கியமான உடலமைப்பை பெறலாம்.
நன்மைகள்
- முகப்பருவினால் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியை ஆமணக்கு எண்ணெய் தடவுவதால் குறைக்க முடியும்.
- காலையில் ஆப்பிள் பழச்சாறுடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து பருகினால் மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
- ஆமணக்கு எண்ணெய் உடலுக்கு வெளியே தடவும்போது நோயெதிர்ப்பு செல்கள் அதிகரிக்கிறது.
- ஆமணக்கு எண்ணெய் தோலினூடே ஆக்ஸிஜன் புழக்கத்தை தாராளமாக கிடைக்க செய்வதனால், இதனால் இளம் மற்றும் ஆரோக்கியமான தோலை வைத்திருக்க உதவுகிறது.
- உணவு குழாயில் உள்ள பூஞ்சை நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. மேலும் வலி மற்றும் அரிப்பு இவற்றில் இருந்து வியக்கத்தக்க நிவாரணத்தை உணர முடியும்.