அருண் விஜய் வில்லன் என சமூக வலைதளங்களில் பேச்சு.

156

அட்லீ படங்கள் எடுத்துக் கொண்டால் ஒரு தனி இயக்கமாக இருக்கும். மாஸ்+கிளாஸ் அதே சமயம் ரசிகர்களை கவரும் வண்ணம் நிறைய விஷயங்களை வைத்து படம் இயக்குவார்.

தெறி, மெர்சல் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இவர் அடுத்து விஜய்யை வைத்து எப்படிபட்ட படம் கொடுக்க போகிறார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

AGS நிறுவனம் அடுத்தடுத்து படத்தில் இணையும் பிரபலங்கள் குறித்த விவரங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அண்மையில் கூட நயன்தாரா இப்பட நாயகி என அறிவித்தனர். இதற்கு நடுவில் சமூக வலைதளங்களில் விஜய் 63வது படத்திற்கு அருண் விஜய் வில்லன் என சமூக வலைதளங்களில் அதிகம் பேச்சு அடிபடுகிறது.

ஆனால் படக்குழு தரப்பில் இருந்து விசாரித்ததில் இதில் துளியும் உண்மை என்று தெரிவிக்கிறார்களாம்.

படம் குறித்து அடுத்தடுத்து அவர்களே அப்டேட் கொடுக்கிறார், வில்லன் யார் என்பதையும் பொறுத்திருந்து அறிவோம்.

SHARE