கட்டுகஸ்தோட்டை நகரில் மாத்தளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 90 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை நகரில் பிரதான பாதையைக் கடக்க முயற்சிக்கும் போது எதிரே வந்துள்ள தனியார் பஸ் ஒன்றில் மோதியதில் கடும் காயங்களுக்கு உள்ளாகிய குறித்த முதியவர் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கட்டுகஸ்தோட்டை யமுனா மாவத்தையைச் சேர்ந்த முத்துசாமி சிதம்பரம் என்ற 90 வயதுடைய முதியவராவார். இவரது சடலம் தற்போது கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை நடாத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து தொடர்பில் பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.