தமிழ் மக்களது உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் மாவீரர் தினம் இன்று வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுக்க போராடி உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வானது இலங்கையில் தமிழர் தாயக பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றைய தினம் தமிழ் தாயக பிரதேசங்களான வடக்கு கிழக்கு பகுதிகளிலும், புலம்பெயர் தேசங்களிலும் மற்றும் தமிழ் நாட்டிலும் மாவீரர் தின ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.