சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த விசேட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இன்று கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இம்மாதம் 17ஆம் திகதி அமைச்சரைச் சந்தித்த கொம்பனித்தெரு ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஐயப்ப சுவாமிகளின் பிரதிப்குமார் தலைமையிலான யாத்திரைக்குழுவினர், சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கையிலுள்ள அனைத்து சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் சார்பில் விடுத்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.