இந்திய ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் இந்தியாவிலிருந்து நாட்டிற்குள் அழைத்து வரப்பட்ட இந்திய இளைஞர்கள் சிலர் கலேவெல – கடுபொத பகுதியில் முறையான வசதியில்லா வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலை பெற்றுத் தருவதாக கூறி குறித்த 30 இளைஞர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்த போதிலும் கடந்த இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்காது வேலையை மற்றும் பெற்றுக் கொண்டு முறையான வசதிகளற்ற வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறித்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
நீர் மற்றும் உணவு வசதிகளற்ற வீடொன்றில் தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக தங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.