இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, ராஞ்சியில் நடைபெறவிருக்கும் உள்ளூர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
2007ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் டோனிக்கு, தற்போது அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று அளிக்கப்படும் ஓய்வுநாட்களில் டோனி தன்னுடைய குடும்பத்துடன் பொழுதை செலவிடுவார். அப்படி இல்லை என்றால், கால்பந்து, கபடி, பேட்மிண்டன், பைக் பந்தயம் உள்ளிட்ட பிற விளையாட்டுக்களில் ஈடுபடுவார்.
महेंद्र सिंह धौनी ने अपने प्रशंसकों के बीच जेएससीए स्टेडियम में लॉन टेनिस में भी हाथ आजमाए। इस दौरान उन्होंने कई बेहतर शॉट खेले और दर्शकों से खूब तालियां बटोरीं।महेंद्र सिंह धौनी ने टेनिस के युगल मुकाबले में बेहतर खेल का मुजाहयरा किया.@msdhoni #Dhoni pic.twitter.com/RcaGPuSwdt
— Sohan singh (@sohansingh05) November 27, 2018
அந்த வரிசையில் தற்போது 37 வயதை அடைந்திருக்கும் டோனி, தனது சொந்த மாநிலமான ராஞ்சியில் நாளை முதல் துவங்க உள்ள உள்ளூர் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதற்காக இன்று டோனி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.