தோற்றம் காரணமாக ஏலத்தில் வாங்க தயங்கும் நிறுவனங்கள்

150

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய காளை ஒன்று அதன் தோற்றம் காரணமாக இறைச்சி நிறுவனங்கள் ஏலத்தில் வாங்க தயக்கம் காட்டுகின்றன. மேற்கு அவுஸ்திரேலியாவில் பண்ணை ஒன்றில் இருக்கும் நிக்கர்ஸ் என்ற இந்தக் காளை 1400 கிலோ கிராம் எடை மற்றும் 6 அடி 4 அங்குல உயரம் கொண்டதாகும். இது அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய காளை என கருதப்படுகிறது.

இந்தக் காளையின் உரிமையாளர் ஜெப் பியர்சன் கடந்த மாதம் ஏலத்தில் விற்க முயன்றபோது, அதனை கையாள முடியாது என்று இறைச்சி நிறுவனங்கள் வாங்குவதற்கு மறுத்துள்ளன. ஏழு வயது கொண்ட அந்த காளை தனது எஞ்சிய வாழ்நாளை தனது பண்ணையில் கழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

SHARE