வீட்டுக்கு வந்த விருந்தினரை வாளால் வெட்டிய நபர் கைது

161

அச்சுவேலியில் அயல் வீட்டுக்கு வந்த விருந்தினரை வாளால் வெட்டிய நபரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டுக்கு நேற்றைய தினம் சென்ற விருந்தினரை அயல் வீட்டில் வசிக்கும் நபர் திடீரென வீடு புகுந்து வாளால் வெட்டியுள்ளார்.

அதனையடுத்து வாள் வெட்டிற்கு இலக்கான நபரை வீட்டில் இருந்தோர் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதேவேளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து வாளினால் வெட்டிய நபரை பொலிஸார் கைது செய்தனர்.

தனிப்பட்ட பகை காரணமாகவே வாளினால் வெட்டியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேக நபர் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE