பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் மகன் ஜெய்சீ சானுக்கு போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சீனாவை சேர்ந்தவரான நடிகர் ஜாக்கிசான் குங்பூ சண்டை படங்களில் நடித்து சாகசம் புரிந்து வருகிறார். இவரது மகன் ஜெய்சீ சான் நடிகர் மற்றும் பாடகராக உள்ளார்.
இந்நிலையில் போதைப்பொருள் உட்கொள்ளுமாறு சிலரை ஜெய்சீ சான் வற்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரது வீட்டில் பொலிசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 100 கிராம் எடையுள்ள ‘மரிஜுவானா’ என்ற போதைப்பொருள் அவரது வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் போதைப்பொருள் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கிழக்கு பீஜிங் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இதுகுறித்த வழக்கின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஜெய்சீக்கு ஆறு மாத சிறை தண்டனையும், 2000 யுவான் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் முதலே ஜெய்சீ சிறையில் உள்ளதால் அடுத்த மாதமே அவர் விடுதலையாகி விடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. |