நாட்டின் இன ஒற்றுமைக்கும், சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தி மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். நாம் அமைதியாக வாழ விரும்புக்கிறோம் மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிஸாரை சுட்டு கொலை செய்தமையை வன்மையாக கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை( 03) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது திருக்கோவில் பிரதேச சமாதானத்தை விரும்பும் மக்கள் வணிகம் எனும் அமைப்பினால் திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக கண்டன ஆர்பாட்டத்தினை முன்னெடுத்ததுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கில்களில் இளைஞர்கள் பேரணியாக தம்பிலுவில் வரை சென்று தமது எதிர்ப்பினை காட்டியிருந்தனர்
அதில் கலந்து கொண்ட பொது மக்கள் சமாதான சூழலை சீர்குலைக்காதே,படுகொலைகள் வேண்டாம்,பொலிஸாரின் படுகொலையை கண்டிக்கின்றோம் போன்ற சுலோக அட்டைகளைகள், ஏந்த தமது எதிர்ப்பினை அமைதியான முறையில் வெளிக்காட்டி இருந்தனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்ற இரு பொலிஸாரின் படுகொலையானது மிகவும் கவலையளிக்ககூடிய, கண்டிக்ககூடிய சம்பவமாகவும் நாட்டின் அமைதிக்கு சவால் விடுப்பதாக அமைந்திருக்கின்றது.
இதனை பொது மக்களாகிய நாம் வன்மையாக கண்டிப்பதுடன் நாட்டில் இவ்வாறான ஒரு சம்பவம் இனி ஒரு போதும் இடம்பெறாது இருப்பதனை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்