வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் மூவரை பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதை பொருள் தடுப்பு பிரிவினரால் ஒரு கிலோ நிறையுடைய கேரள கஞ்சாவை வைத்திருந்த 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இன்று காலை யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸை நொச்சிமோட்டை பகுதியில் வைத்து வழிமறித்த பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே குறித்த கஞ்சா கைப்பற்றபட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கஞ்சாவினை தமது உடைமைக்குள் மறைத்துவைத்து கடத்திச்சென்ற நிலையிலேயே அவர்களை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர் .
கைதுசெய்யபட்டவர்கள் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தனர்.