நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தில் இராஜ கோபுரம் 

191
நானாட்டான் ஸ்ரீசெல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தில் இரண்டு கோடி என்பது இலட்சம் ரூபா செலவில் இராஜ கோபுரம் அமைக்கப்படவுள்ளது என்று ஆலய பரிபாலக சபையினரும் இராஜகோபுரம் அமைப்பதற்கு என்று உருவாக்கப்பட்ட இராஜகோபுர திருப்பணிச் சபையினரும் இன்று(5) தெரிவித்தனர்
ஐந்து தலங்கள் எழுபத்தைந்து அடி உயரமும் கொண்ட இராஜகோபுரம்  அடிக்கல் நடும் நிகழ்வு எதிர்வரும் பன்னிரெண்டாம் திகதி நடைபெறவுள்ளது அற்குரிய முன்னேற்பாடு  புன்னியதான பூஜையும் முன் மண்டபத்தின் கூரை பிரிக்கும் நிகழ்வும் இன்று(5) புதன்கிழமை காலை ஒன்பது மணியளவில் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் இராஜகோபுர திருப்பணிச்சபையினர்  ஸ்ரீசெல்வமுத்துமாரியம்மன் ஆலய நற்பணிமனறத்தினர் கலந்து கொன்டனர்.
ஆலயத்திற்கான இராஜகோபுரம் அமைக்கும் பணி தமிழ் நாட்டை சேர்ந்த கும்பகோணம் மணிகண்டன் ஆசாரியார் தலைமையில் நடைபெற உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
SHARE