போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

170

ஹெரோயின்போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று பொலிஸார் மேற்கொண்ட சுற்றுவளைப்பின் போது வெவ்வேறு இடங்களிலிருந்து மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை (சுமார் பத்து ஆண்டுகள்) போதைபொருட்கள் பாவனை தொடர்பில்  371 பேர்  கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரிகளில் ஒருவர்  4 கிராம்  ஹெரோயினுடன் கந்தானையில் கைது செய்யப்பட்டதாகவும் மற்றொரு நபர் 10 கிராம் ஹெரோயினுடன் அங்குலூனில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்றாவது சந்தேக நபர் மூன்று கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பாணந்துறையில் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

SHARE