தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினான நடிகை நயன்தாரா தற்போது விசுவாசம், விஜய்63 என பல படங்களில் உள்ளார்.
அவர் ஷங்கர் அடுத்து இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. இதே படத்தில் நடிகை காஜல் நடிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் நயன்தாரா 6 கோடி சம்பளம் கேட்டு ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தை அதிர்ச்சியாக்கியுள்ளார் என கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனம் போட்ட சில கண்டிஷன்களை ஒப்புக்கொள்ளமுடியாது என நயன்தாரா ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம். அதனால் வேறொரு நடிகையை தேர்வு செய்ய தற்போது படக்குழு முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது.