நூடுல்ஸ் வெஜிடபிள் போண்டா

206
தேவையான பொருட்கள்

வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கேரட் -1
பீன்ஸ் – 5
பச்சை பட்டாணி – கொஞ்சம்
உருளைக்கிழங்கு – கொஞ்சம்
எண்ணெய் – தேவையான அளவு
மேகி நூடுல்ஸ் – சின்ன பாக்கெட்
கடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியை தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த அனைத்து காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் மேகி நூடுல்ஸ், மசாலாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.

வேகவைத்த மேகி நூடுல்ஸ்சுடன், வதங்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கையில் சிறிது தண்ணீர் தடவி உருட்டினால் கையில் ஒட்டாமல் இருக்கும்.

கடலை மாவை / பஜ்ஜி போண்டா மிக்ஸ்சில் தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைத்து கொள்ளவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் நுடுல்ஸ் உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் வெஜிடபிள் போண்டா ரெடி.
SHARE