சிங்களவர்களும் முஸ்லீங்களும் தமிழர்களும் ஒற்றுமை பற்றி பேசும் நீங்கள் தமிழனை சிங்களவன் அழிக்கும்போது எங்கே போனீர்கள்?

226

 

வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்  இலங்கை, வவுனியா வவுனியாவில் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாதீர்கள் என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது. வவுனியா, பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மூவினங்களையும் உள்ளடக்கிய சிவில் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது மீண்டும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்காதே, கடந்த யுத்த வடுவே எம்மிடம் ஆறவில்லை, மீண்டும் யுத்தம் என்ற சொல் கூட எமது நாட்டிற்கு வேண்டாம், தேசிய நல்லிணக்கத்தினை காப்பாற்றுவோம் என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின, வவுனியா நகர பள்ளிவாசல் தலைவர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.  சிங்களவர்களும் முஸ்லீங்களும் தமிழர்களும் ஒற்றுமை பற்றி பேசும் நீங்கள் தமிழனை சிங்களவன் அழிக்கும்போது எங்கே போனீர்கள்?

 

SHARE