அமைச்சர்களுக்கு கொடுப்பனவுகளை இடை நிறுத்துவற்கு நடவடிக்கை

208

அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை நிறுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையை இடை நிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடையுத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அமைச்சர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும், தனிப்பட்ட நிர்வாகத்தினருக்கு வழங்கப்படும் வேதனமும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில் அமைச்சர்களின் பதவிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளதாக பிரதமரின் செயலாளர் அறிவித்துள்ளார்.

SHARE