சன் டிவி எடுத்த அதிரடி முடிவு

209

சன் என்ற பெரிய தொலைக்காட்சியில் கடந்த பல வருடங்களாக குறிப்பிட்ட நேரத்தில் சீரியல்களாக நடித்து வருகிறார் ராதிகா சரத்குமார்.

தன்னுடைய ராடான் நிறுவனம் மூலம் இதுவரை பல சீரியல் தயாரித்து நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த வாணி ராணி சீரியல் முடிவுக்கு வந்தது. உடனே அடுத்த சீரியலுக்கு தயாராகிவிட்டார் ராதிகா. சந்திரமுகி என்ற பெயரில் புதிய சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த சீரியலுக்கான புரொமோக்கள் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. முதன்முறையாக இந்த சீரியலின் அறிமுகத்திற்காக 1 மணி நேரம் ஒளிபரப்ப இருக்கிறார்களாம், ஒரு சீரியலுக்காக 1 மணிநேரம் கொடுப்பது இதுவே முதன்முறை என ராதிகா அவர்களே டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

SHARE