நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற போராட்டங்கள்

208

யாழ்ப்பாணம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் அடையாள நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் ஆலய முன்றலிலிருந்து மனித உரிமையை பிரகடனப்படுத்தும் பதாகைகளை தாங்கியவாறு ஊர்வலகமாக துர்க்காதேவி மண்டபம் வரை இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.

அதன் பின்னர் யாழ். மனித உரிமைகள் முதலுதவிச் சங்கம் மற்றும் இலங்கை சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் மனித உரிமைகள் தின நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், யாழ்.பிராந்திய மனித உரிமைக்குழு ஆணையாளர் ரி.கனகராஜ், பேராசிரியர் ம.பெ.மூக்கையா, பொலிஸ் அத்தியட்சகர் பி.யு.உடுகம, இலங்கை அகதிகள் மறுவாழ்வுக்கழகத் தலைவி சி.சூரியகுமாரி ஆகியோர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

வவுனியா

வவுனியாவில் இன்று காணாமற்போன உறவுகளின் போராட்டம் ஒன்று பிற்பகல் 1 மணியளவில் குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பேரணியாக குடியிருப்பு பாடசாலை வீதி வழியாக வைத்தியசாலை சந்திக்குச் சென்று தமது போராட்ட களத்தினை வந்தடைந்துள்ளனர்.

இன்றுடன் 658 நாட்களான போராட்டம் சர்வதேச மனித உரிமைகள் தினம் வடகிழக்கில் தமிழர் தீர்வு பற்றிய வாக்கெடுப்பு நடத்த ஜ.நா.வின் உதவியை நாடுகின்றோம்.  ஜனநாயகத்தை ஊக்குவிப்பதற்கான வாக்கெடுப்பு எனப் பொறிக்கப்பட்ட பதாதையுடன் வவுனியாவில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் உறவுகள் இன்றைய போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இன்றைய போராட்டத்தில் பெருமளவான தாய்மார்கள் கலந்துகொண்டதுடன் குடியிருப்பு பிள்ளையார் ஆலய வழிபாடுகளின் பின்னர் தேங்காய் உடைத்து வழிபட்டு பாடசாலை வீதிவழியாக வைத்தியசாலை சந்தி சென்று அங்கிருந்து தமது போராட்ட களத்திற்கு சென்றனர்.

SHARE