இலங்கை அணியின் களத்தடுப்பு மிக மோசமாது ஸ்டீவ் ரிக்சன் தெரிவித்துள்ளார்.

233

இலங்கை அணியின் களத்தடுப்பு மிக மோசமான நிலையிலுள்ளது என அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஸ்டீவ் ரிக்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் களத்தடுப்பில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு நான் தீவிரமாக பணியாற்றவேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் பல கிரிக்கெட் போட்டிகளை பார்த்துள்ளேன், இலங்கை அணியின் களத்தடுப்பு  மிகவும் கீழ்நிலையில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

பாக்கிஸ்தானின் களதடுப்பு பயிற்றுவிப்பாளராக நான் பணியாற்ற ஆரம்பித்த காலத்தில் அந்த அணியும் இவ்வாறான நிலையிலேயே காணப்பட்டது என ரிக்சன் தெரிவித்துள்ளார்.

நான் பாக்கிஸ்தான் அணியுடன் இணைந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டேன் அதன் பின்னர் அந்த அணியின் களத்தடுப்பில் முன்னேற்றம் ஏற்பட்டது அதன் பின்னர் அவர்கள் திறமையான களத்தடுப்பு அணியாக மாறினார்கள் என ரிக்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகள் முன்னரும் தன்னை அணுகியதாகவும் எனினும் பல்வேறு காரணங்களால் அதனை நிராகரித்துவிட்டதாகவும் ரிக்சன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் என்னை நீண்ட காலத்திற்கு பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டது நான் முதலில் ஏழு மாதங்கள் பணியாற்றுவோம் அதன் பின்னர் பார்ப்போம் என தெரிவித்தேன் என ரிக்சன் குறிப்பிட்டுள்ளார்.

SHARE