சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே இன்று ரிக்டெர் 7.1 அளவில். சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

216

வட அண்டார்டிகாவிலுள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே இன்று ரிக்டெர் 7.1 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த  நிலநடுக்கம் நிலத்துக்கடியில்  176 கிலோ மீட்டர் அழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி  எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுக்கப்படவில்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

SHARE