நேற்று நடந்ததுபோல் உள்ளது! கோஹ்லி வெளியிட்ட புகைப்படம்

265

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா ஜோடி இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் நிலையில், ஒருவருக்கொருவர் ட்விட்டரில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

கடந்த ஆண்டு இதே நாளில் விராட் கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா ஜோடி திருமணம் செய்து கொண்டது. அதன்படி இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை இவர்கள் கொண்டாடுகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் விளையாடி வரும் விராட் கோஹ்லி, தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவி அனுஷ்காவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘என்னால் இதை நம்ப முடியவில்லை, ஏனெனில் நேற்று நடந்தது போல் இதனை நான் உணர்கிறேன். நேரம் மெதுவாக பறந்துவிட்டது. என் இனிய தோழி மற்றும் காதலிக்கு இனிய முதலாமாண்டு திருமண வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது திருமண நாள் புகைப்படங்களையும் கோஹ்லி பகிர்ந்துள்ளார். இந்நிலையில், அனுஷ்கா ஷர்மாவும் தனது கணவருக்கு வாழ்த்துக் கூறி திருமண நாள் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அவர் தனது ட்விட்டரில், ‘நேரம் கடந்து செல்லவில்லை என்பதை நீங்கள் உணரும் போது, இது சொர்க்கம்… ஒரு சிறந்த மனிதரை நீங்கள் மணந்தால், இது சொர்க்கம்’ என குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சாதனை வெற்றி பெற்ற கோஹ்லிக்கு, தனது முதலாம் ஆண்டு திருமண நாள் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE