அவுஸ்திரேலியாவில் சாதிக்க வயதில்லை என்பதை 102 வயது மூதாட்டி ஒருவர் நிரூபித்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டைச் சேர்ந்தவர் Irene O’Shea(102). கடந்த10 வருடங்களுக்கு முன்பு இவரின் 67 வயது மகள் Motor Neurone என்ற நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அந்த நோயைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தன்னுடைய 102 வயதிலும் 14,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்துள்ளார்.
மிக அதிக வயதில் ஸ்கை டைவிங் அடித்த பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனது மகளின் இழப்பு எனக்கு மிகுந்த வேதனையை கொடுக்கிறது. அவள் Motor Neurone என்ற நோயினால் கடந்த 10 வருடங்களுக்கு முன் உயிரிழந்துவிட்டாள்.
நான் இந்த முறை மட்டுமல்ல அடுத்த வருடமும் ஸ்கை டைவிங் அடிப்பேன். நீண்ட நாள் நான் உயிரோடு இருந்தால் ஸ்கைடைவ் அடிப்பேன்.
105 வயதிலும் விண்ணில் இருந்து குதிப்பேன். ஸ்கை டைவைச் செய்யும்போது எப்போதும் போலத்தான் இருந்தேன். கடந்த முறை எப்படி இருந்தேனோ அதே உணர்வுதான் இப்போதும் இருந்தது என்று கூறியுள்ளார்.
மேலும் Motor Neurone Disease Association of South Australia என்ற மையத்துக்கு நிதிதிரட்டுவதற்காக அவர் இந்த ஸ்கை டைவிங்கை மேற்கொண்டுள்ளார்.
இதன்மூலம் ஐரின் 12,000 டாலர் நிதி திரட்டியுள்ளார். ஐரினுக்கு 5 பேரக்குழந்தைகள், 11 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். தன்னுடைய 100-வது பிறந்தநாளில் முதன் முதலாக ஸ்கை டைவிங் அடித்த இவர், தற்போது மூன்றாவது முறையாக விண்ணில் இருந்து குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.