பாராளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை.
இதன்போது பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை சஜித் பிரேமதாஸாவால் முன்வைக்கப்பட்டது.
இதேவேளை, இவ்வாறு பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் வாக்குகள் தீர்மானமிக்கவையாக அமையவுள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக இன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அதனை தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.