பிரித்தானிய பிரதமர் தெரசா மே-க்கு எதிராக டோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் 48 கடிதங்களை அனுப்பியுள்ளதாக 1922 கமிட்டியின் தலைவர் சர் கிரஹாம் பிராடி பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான ஒரு பொது வாக்கெடுப்பை கடந்த 2016ம் ஆண்டு நடத்தி, வெற்றிகண்டார்.
இதனை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவு குறித்து பிரதமர் தெரசா மே பிரெக்ஸிட் திட்டம் ஒன்று உருவாக்கினார்.
இதற்கு எம்.பி.க்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சிலர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர்.
இது பிரதமர் தெரசாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துள்ள 1922 கமிட்டியின் தலைவர் சர் கிரஹாம் பிராடி, பிரதமர் தெரசா மே-க்கு எதிராக டோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் 48 கடிதங்களை அனுப்பியுள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி முதல் மாலை 8 மணிவரை காமன்ஸ் இல்லத்தில் நடைபெறும் எனவும், இதுகுறித்து நேற்று இரவே தெரசா மே-விற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
இரகசிய வாக்கெடுப்பின் முடிவு எவ்வளவு விரைவாக அறிவிக்கப்படும் என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் திருமதி மே வெற்றி பெற தனது ஆதரவில் பெரும்பான்மை பெற வேண்டும்
பிரதமர் மே இந்த வாக்கெடுப்பில் வெற்றிபெறவில்லையென்றால், கன்சர்வேடிவ் தலைமைப் போட்டியில் அவர் நிற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.