ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கடந்த 9 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது என தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு வழங்கப்படவுள்ள நிலையிலேயே இக் கூட்டம் கூடவுள்ளது.
அதன்படி இக் கூட்டமானது இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.