ததே.கூ -ஐதேக எழுத்து மூல உடன்படிக்கை- போலி பொலிசில் முறைப்பாடு .

187

ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் எழுத்துமூல உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்ற கருத்தை பரப்பும் நோக்கில் இனந்தெரியாத நபர்கள் வெளியிட்டுள்ள போலி ஆவணம் குறித்து ஐதேக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளது.

ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறும் நோக்கில் அந்த கட்சியுடன் எந்த உடன்படிக்கையையும் செய்துகொள்ளவில்லை என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இரு கட்சிகளிற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது என பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளன என குறிப்பிட்டுள்ள ஐக்கியதேசிய கட்சி இவ்வாறான கருத்தை பரப்புவதற்காக போலி ஆவணமொன்றை இனந்தெரியாத நபர்கள் தயாரித்து வெளியிட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

SHARE