சிறுவயது தேரரொருவர் நேற்று நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

208

யடியந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிவத்த பகுதியின் களனி கங்கையில் குளிக்க சென்ற தேரர்களில் சிறுவயது தேரரொருவர் நேற்று நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நிட்டம்புவையைச் சேர்ந்த 13 வயதுடைய தேரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை மாலை தேரர்கள் சிலர் குறித்த களணி கங்கைக்கு குளிக்கச் சென்றிருந்த போது குறித்த தேரர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதன்போது அப்பகுதியில் கடமையிலிருந்த கடற்படையினர் மற்றும் பொலிஸார் அவரை காப்பற்ற முயற்சித்த நிலையிலும் குறித்த தேரர் நீரில் மூழ்கி மரணித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுவயது தேரரின் சடலமானது தற்போது யட்டியந்தோட்டை வைத்தியசாலையில் மரண பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை யட்டியந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE