நஸ்ரியா போல தோற்றமளிப்பது எனக்கு சாதகமான விஷயம் தான்

205
தமிழ், மலையாளம் என இரு மொழி ரசிகர்களையும் ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் நடிகை நஸ்ரியா. பிசியாக படங்களில் நடித்து வந்த நேரத்தில் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து செட்டில் ஆனார்.

இந்நிலையில் இவரை போலவே அச்சு அசலாக தமிழ் சினிமாவில் வர்ஷா பொல்லம்மா என்ற நடிகை வளர்ந்து வருகிறார். சசிகுமாரின் வெற்றிவேல் படத்தின் மூலம் அறிமுகமான வர்ஷா, பிறகு யானும் தீயவன், 96, சீமத்துரை போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் நஸ்ரியாவை போலவே இருப்பதால் தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

நஸ்ரியாவை போலவே இருப்பது உங்களுக்கு சாதகமா அல்லது பாதகமா என கேட்டத்தற்கு, இதில் என்ன சந்தேகம், நஸ்ரியா போல தோற்றமளிப்பது எனக்கு சாதகமான விஷயம் தான். விஜய் சேதுபதி தான் எனக்கு கோலிவுட்டில் பிடித்த நடிகர். 96ல் அவருடன் நடித்தபோது கொஞ்சம் பதற்றமாக தான் இருந்தது என்றார்.

SHARE